கருவில் இருக்கும் போதே சிசுவுக்கு தண்டுவட ஆப்பரேசன்! தரமான சாதனை படைத்த மருத்துவர்கள்!

அமெரிக்காவில் கருவில் இருந்த 8 மாத குழந்தைக்கு "ஸ்பைனா பிஃபிடா" என்ற முதுகு தண்டு வட வளர்ச்சி பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கபட்டது.


இதனை அடுத்து 25 ஆவது வார சிசுவின் தாய் வயிற்றில் சுமார் 4.5 செ.மீ அளவிற்குத் துளையிட்டு குழந்தையின் முதுகுத் தண்டு வடத்தில் அறுவை சிகிச்சை மேற்க்கொண்டனர்.

நரம்பியல், எலும்பியல் மற்றும் குழந்தை வளர்ச்சி துறை சார்ந்த மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை குழுவாக மேற்க்கொண்டது, 10 மாதம் முடிந்து கடந்த 3 ஆம் தேதி சிசேரியன் மூலமாக பெற்றெடுக்கபட்ட பெண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது எனவும் இனி தாய் சேய் இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கபடுகிறது.

குழந்தை ஊணமாக பிறப்பதில் இருந்து பாதுகாக்கவும், தடுப்பதற்க்காகவும் இந்த முறைகள் பயன்ப்படுத்தபடுகிறது.பொதுவாக குழந்தை பிறந்த பின்னர் தான் இந்த வகை சிகிச்சை கொடுக்கப்படும் ஆனால் கருவில் இந்த அறுவை சிகிச்சை நடத்தபட்டது இதுவே முதல் முறையாகும் .

வருடத்தில் இம்மாதிரியான நோய்களால் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கபடுவதாக அமெரிக்க நோய்கள் தடுப்பு மையம் தகவல் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.