கண்கள் இரண்டும் மூடியே பிறந்த குழந்தை..! கைகளும் உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பரிதாபம்! ஆனால்..?

அமெரிக்காவில் கண்ணிமைகள் ஒன்றோடு ஒன்று மூடியபடி தோல்கூட இல்லாமல் பிறந்த குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.


2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்னறு பிரிஷில்லா என்ற பெண்ணிற்கு, டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் வைத்து குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை பிறக்கும்போதே கண்ணிமைகள் மூடியபடி கை, கால்கள் மற்றும் உடலில் பெருமளவுக்கு தோலே இல்லாமல் மொழுக்கட்டையாக இருந்திருக்கிறது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரிஷில்லா உரிய சிகிச்சை அளித்து தனது குழந்தையை காப்பாற்ற தீர்மானித்தார்.  இதன்படி, குழந்தைக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது.

Aplasia Cutis Congenita எனும் அரிய வகை உடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த 10 மாத குழந்தை தற்போது முழு மருத்துவ சிகிச்சையின்கீழ் உடல்நலம் தேறி வருகிறது. விரைவில் மற்ற குழந்தைகளைப் போல குணமடைந்துவிடும் என, மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.