வெறும் நாக்கு மட்டும் தான்! ரூ.70 லட்சம் சம்பாதிக்கும் இளம் பெண்! எப்படி தெரியுமா?

நீளமான தன்னுடைய நாக்கை வைத்தே ஆண்டுக்கு 70 லட்ச ரூபாய் சம்பாதித்து வருகிறார் ஒரு பெண்.


பொதுவாக சிறுவர்கள் வாய் துணுக்காக பேசும்போது நாக்கு ரொம்ப நீளம் அதான் திமிரு என பெரியவர்கள் கண்டிப்பார்கள். ஆனால் அமெரிக்காவில் தன்னுடைய நீண்ட நாக்கு மூலம் பல்வேறு வித்தைகள் காட்டி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு பணம் சம்பாதித்து வருகிறார். 

அமெரிக்காவில் வசித்து வரும் மிகைலா சரவியா என்பர் தனது நீண்ட நாக்கு மூலம் சமூக வலைதளங்களில் புகழ் பெற்றுள்ளார். தனது 11 வயது முதலே கவர்ச்சியான உடைகள் அணிந்து வாழைப்பழம், குச்சி ஐஸ், வெள்ளரிக்காய் போன்ற பொருட்களை தனது நீண்ட நாக்கினால் வருடி அதனை புகைப்படம், வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்த ஆண்டில் மட்டும் 99,500 டாலர்கள் சம்பாதித்து இருக்கிறார். இந்திய மதிப்பில் 70 லட்ச ரூபாய்க்கும் அதிகமாகும். இவரின் நாக்கை ரசிப்பதற்கென்றே இன்ஸ்டாகிராமில் 20 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

ஒரு பதிவுக்கு சுமார் 900 முதல் 3000 டாலர்கள் வரை வாங்கும் மிகைலா இதற்காக KKVSH என்னும் செயலி ஒன்றையும் உருவாக்கி உள்ளார். அதில் கவர்ச்சிகரமான பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்.

மிகைலாவின் நாக்கின் நீளம் சுமார் 6.5 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த வீடியோ ரசிக்கப்படுவது நாக்கால் செய்யப்படும் வித்தைகளால் மட்டும் அல்ல. அவரது கட்டுமஸ்தான் கவர்ச்சியான உடம்பை காட்டுவதால்தான் எனவும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இனிமேல் யாரை பார்த்தும் நாக்கு நீளம் என திட்டாதீர்கள். அவர்களால் பின்னால் வருமானம் வர வாய்ப்பு உள்ளது.