ரூ.2.5 கோடி மோசடி! பிரபல நடிகைக்கு போலீஸ் வலை!

கடந்த 2001ஆம் ஆண்டு விஜய் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த படம் புதிய கீதை.


இந்த படத்தில் விஜய்க்கு மற்றொரு காதலியாக நடித்திருப்பார் நடிகை அமீஷா பட்டேல். இவர் குஜராத்தை சேர்ந்தவர். தற்போது தெலுங்கு சினிமாவில் ஒரு குணச்சித்திர நடிகையாக இருந்து வருகிறார்.

 இந்நிலையில் இவர் இவரும் இவரது கணவர் கூனல் கோர்மலர் என்பவரும் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் உள்ளனர். மேலும் தேசி மேஜிக் என்ற படத்தில் நடித்து இந்த படத்தை தயாரித்தார் அமீஷா.

 இந்த படத்தை தயாரிக்க அஜய்குமார் சிங் என்பவரிடமிருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனாக பெற்று இருக்கிறார் அமிஷா பட்டேல் .இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை இந்நிலையில். வாங்கிய பணத்திற்கு பதிலாக 3 கோடி ரூபாய்க்கு செக் கொடுத்துள்ளார் அமிஷா பட்டேல் .

ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆகி உள்ளது இதனை பற்றி அவர்களிடம் கேட்டதற்கு அமிஷா பட்டேல் தரப்பில் இருந்து அஜய்குமார் சிங்கை மிரட்டியுள்ளனர். இதனால் கடுப்பான பைனான்சியர் அஜய்குமார் சிங் அமிஷா பட்டேல்  மீது மோசடிவழக்குப்பதிவு செய்துள்ளார்