பச்சிளம் குழந்தையை காப்பாற்ற ஒரு மாநிலமே களம் இறங்கியது! நெஞ்சை தொடும் உருக்கமான சம்பவம்!

திருவனந்தபுரம்: பச்சிளம் குழந்தையை காப்பாற்றுவதற்காக, கேரள அரசு பெரும் முயற்சி ஒன்றை எடுத்து, சாதித்துக் காட்டியுள்ளது.


கர்நாடக மாநிலம், மங்களூருவைச் சேர்ந்த, பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை ஒன்றுக்கு, இதய நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்கு, மேல் சிகிச்சை தருவதற்காக, குழந்தையின் பெற்றோர் திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரா திருநல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தனர். இதற்கு, அவசர சிகிச்சை தர வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால், மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 600 கிலோ மீட்டர் தொலைவை ஆம்புலன்ஸ் மூலமாக, கடப்பது சாத்தியமில்லை. இதையடுத்து, கேரள அரசின் உதவி கோரி, விண்ணப்பம் செய்தனர். இதன்படி, முதலமைச்சர் பினராயி விஜயனின் உத்தரவுப்படி, உடனடியாக, கேரள அரசின் இருதயா திட்டம் மூலமாக, அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அனுமதி தரப்பட்டது.

அத்தடன், நேற்று (ஏப்ரல் 16) காலை 11 மணிக்கு, மங்களூருவில் இருந்து அதிநவீன வசதிகளுடன்கூடிய ஆம்புலன்ஸில், அந்த குழந்தை திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. இதற்கு, ஃபேஸ்புக் லைவ் மூலமாக, பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டது. முதலமைச்சர் பினராயி விஜயனும் தனிப்பட்ட முறையில் ட்விட்டரில் வேண்டுகோள விடுத்திருந்தார். பல்வேறு இடங்களிலும், போலீசாரும், சமூக ஆர்வலர்களும் போக்குவரத்தை சீர்செய்து தர, அந்த ஆம்புலன்ஸ் 5 மணிநேரத்தில், 600 கிலோமீட்டரை கடந்து, திருவனந்தபுரம் வந்தடைந்தது. இதற்காக, ஆம்புலன்ஸின் டிரைவர் உள்பட பலருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.