காங்கிரசில் சேர்ந்த அம்பேத்கர் பேரன்! அதிர்ச்சியில் மோடி! ஏன் தெரியுமா?

டாக்டர் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் ராஜ் அம்பேத்கர், ரிபப்ளிக்கன் சேனா என்ற இயக்கத்தை நடத்திவருகிறார். இவரை தங்கள் பக்கத்திற்கு இழுப்பதற்கு டெல்லி பி.ஜே.பி. கடும் முயற்சியை எடுத்துவந்தது. இந்த நிலையில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார்.


அம்பேத்கரின் கொள்கைகளை முழுமையாக நிறைவேற்ற, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்று கூறியிருக்கும் ஆனந்த் ராஜின் நடவடிக்கையால் டெல்லி பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏனென்றால், முக்கோணப் போட்டியால் எளிதில் டெல்லியில் 7 தொகுதிகளையும் கைப்பற்றிவிடலாம் என்று திட்டமிட்டது. 

ஆனந்த் ராஜை கோட்டைவிட்ட டெல்லி பி.ஜே.பி.யினருக்கு மோடி செமயாக டோஸ் விட்டாராம். ஏனென்றால் சமீபத்தில்தான் பி.ஜே.பியின் சட்டப்பிரிவை சேர்ந்த பி.டி.சர்மா காங்கிரஸில் இணைந்தார். டெல்லி பிரதேஷ் பூர்வாஞ்சல் கான பரிஷத் கட்சியின் நிர்மல் பதக்கும் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி பலம் பெற்றுவருவதைக் கண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணியை கோட்டைவிட்டது தவறு என்று இப்போது வருந்துகிறாராம்.