திடீர் ஏழையான அம்பானி! நாளை அடுத்த அட்டாக்!

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடியை இழந்த முகேஷ் அம்பானி. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வெளியேறினார்.


உலக அளவிலான பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியா முதற்கொண்டு ஒட்டுமொத்த உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 

கடந்த டிசம்பர் மாதம் சௌதி அரேபியாவின் ஆரம்கோ எண்ணெய் நிறுவனத்துடன் பகிரப்பட்ட ஒப்பந்த வணிகம் மூலம். அப்போது இந்தியாவின் அதிகப்படியான சொத்து மதிப்புள்ள நிறுவனமாக உருவானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

அதன் பிறகு ஆரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதல். மேலும் சவுதி அரேபியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அந்த நிறுவனத்தின் பங்குகள் எதிர்பாராத விதமாக சரிவை சந்தித்தன.

அது மட்டுமின்றி இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் வைரஸ் தாக்குதலால் இந்தியாவின் பங்கு சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மற்றும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3000 புள்ளிகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது. 

இந்த இழப்பின் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பை கொண்டதாக கூறி முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறைந்ததன் காரணமாக. இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தையும் இழந்துள்ளார் முகேஷ் அம்பானி. மேலும் இன்று இரவு அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்க இருப்பதாக வந்துள்ள செய்திகளின் தாக்கம்.

நாளை இந்திய பங்குச்சந்தைகளில் கடுமையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால். நாளை பங்குச்சந்தைகள் கடுமையான ஆட்டத்தை காண இருப்பதாக அச்சம் கொண்டுள்ளனர் இந்திய பங்குச் சந்தையில் பயணிக்கும் முதலீட்டாளர்கள்.

மணியன் கலியமூர்த்தி