நண்பனின் மனைவியை கரம் பிடிக்க தனது மனைவிக்கு பல கோடி ரூபாய்! அமேசான் ஓனரின் பக்கா டீல்!

வாஷிங்டன்: உலக வரலாற்றில் முதல்முறையாக, அதிகபட்ச இழப்பீட்டு தொகைக்கு, அமேசான் நிறுவனர் தனது மனைவியை விவாகரத்து செய்ய முன்வந்துள்ளார்.


உலகிலேயே மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவன தலைவராக ஜெப் பிசாஸ் உள்ளார். இவர்தான் தற்போதைய நிலையில் உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரர் ஆவார். ஜெப் பிசாஸின் மனைவி பெயர் மெகென்ஸி. இவர்களுக்கு, கடந்த 1993ம் ஆண்டு திருமணமான நிலையில், 4 குழந்தைகளும் உள்ளனர். திருமணம் நடந்த பிறகுதான், ஜெப் பிசாஸ் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார். தனது பங்குதாரராக மனைவி மெக்கென்ஸியையும் அவர் நியமித்துள்ளார். 

தற்சமயம் அமேசானின் வர்த்தகம் உலக அளவில் முன்னிலையில் உள்ளது. பல தரப்பிலான பொருட்களை ஆன்லைனிலேயே விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், உலக வர்த்தக துறையில் தனி முத்திரை பதித்துள்ளது. ஆனால், அதற்கு ஒரு திருஷ்டி போல, தற்போது ஜெப் பிசாஸ் தனது நண்பரின் மனைவி மீது காதல் வசப்பட்டுள்ளார். இதனால் மனைவியை விவாகரத்து செய்வதாக,  கூறியுள்ளார்.

இந்த தகவலை இருவருமே, ட்விட்டரில் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அத்துடன், தங்களது 25 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், இனி நல்ல நண்பர்களாக தொடர்வோம் எனவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

விவாகரத்து தொடர்பாக, உரிய நிதி இழப்பீடு தரும்படி, ஜெப் பிசாஸ்க்கு, நீதிமன்றம் 90 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. இதன்பேரில், வாஷிங்டன் போஸ்ட், ப்ளூ ஆர்ஜின் போன்ற நிறுவனங்களில் தனக்குள்ள பங்குகளை மனைவி மெக்கன்ஸிக்கு வழங்க, ஜெப் பிசாஸ் முன்வந்துள்ளார்.

இதுதவிர, அமேசானில், அவருக்கு 4 சதவீத பங்குகள் உள்ளன. இவற்றின் மதிப்பே, 38 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த வார இறுதில், மெக்கன்ஸிக்கு கிடைக்கவிருக்கும் சொத்து பங்கீடுகள் பற்றி விவரம் தெரிந்துவிடும். எப்படி இருந்தாலும், உலக பணக்கார பெண்களின் பட்டியலில், அவர் 3வது இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகிலேயே நடைபெறும் அதிகபட்ச விவாகரத்து இழப்பீட்டு தொகை இதுதான் எனவும் குறிப்பிடப்படுகிறது.

மெக்கன்ஸிக்கு கிடைக்கவிருக்கும் சொத்து பங்கீடுகள் பற்றி விவரம் தெரிந்துவிடும். எப்படி இருந்தாலும், உலக பணக்கார பெண்களின் பட்டியலில், அவர் 3வது இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகிலேயே நடைபெறும் அதிகபட்ச விவாகரத்து இழப்பீட்டு தொகை இதுதான் எனவும் குறிப்பிடப்படுகிறது.