ஆவாரம்பூ உடல்பலத்தை அதிகரித்து உடலை மினுமினுப்பாக்கும் சக்தி கொண்டதா? எப்படி?

உடல் பலம் அதிகரிக்க வேண்டும் என விரும்புவோர், ஆவாரம்பூவை பாலில் கலந்து குடித்து வரலாம்.


நெல்லிக்காய், செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, வெந்தயம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொண்டு, நல்லெண்ணையில் காய்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும்.

ஆவாரம்பூ, காய், பட்டை, இலை, வேர் அனைத்தையும் காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் குறைந்து நல்ல தீர்வுக் காண முடியும். மினுமினுப்பான சருமம் பெற வேண்டும் எனில், ஆவாரம்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மினுமினுப்பான சருமம் பெறலாம்.

ஆவாரை கொழுந்து, ஆவாரம்பூ, ஆவாரை இலை, கீழாநெல்லி, நெல்லி வற்றல் ஆகியவற்றை ஐந்து கிராம் அளவு எடுத்து, மோர் விட்டு நன்கு கலந்து, அதை வெயிலில் உலர்த்தி காலை, மாலை அரை கிராம் அளவு மோரில் கலந்து உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும். 

ஆவாரம்பூவின் நடுவில் இருக்கும் பகுதியை 50 கிராம் அளவு எடுத்து, இரவு நீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை வடிகட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும். ஆவாரம்பூ, கறிவேப்பிலை, நெல்லிக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும்.