தமிழிசையை கைகழுவிய கூட்டணிக் கட்சிகள்!! ஆரம்பிச்சாச்சு கூட்டணி கும்மாங்குத்து! கனிமொழிக்கு சுக்ரதிசை!!

தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து களம் இறங்கச் சொன்னபோதே தமிழிசைக்கு தன்னை பலி கொடுக்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றியது. ஆனாலும், தைரியமாக நிற்பதற்குத் தயாரானார்.


ஆனால், இன்று தன்னுடைய வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோதுதான், நிஜமாகவே தான் ஒரு பலியாடு என்பதை உணர்ந்துகொண்டார் தமிழிசை.

ஆம், இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்குச் சென்றபோது அ.தி.மு.க. தவிர வேறு கூட்டணிக் கட்சியினர் யாரும் உடன் செல்லவில்லை. குறிப்பாக பா.ம.க., தே.மு.தி.க., ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் என யாருமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எட்டிப் பார்க்கவில்லை.

என்னவாம் காரணம் என்று விசாரித்தால், அக்கா யாரையுமே போன் செய்துகூட அழைக்கவில்லையாம். தான் வேட்புமனு தாக்கல் செய்யப் போகிறேன், எல்லோரையும் சரியா வரச் சொல்லுங்க என்று தன்னுடைய உதவியாளருக்கு உத்தரவு கொடுத்தாராம்.

அவரும் சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் பேசினாராம். வரச்சொன்னது தவிர பண விவகாரம் குறித்து எந்த உறுதிமொழியும் குடுக்கவில்லை என்றதும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டார்கள்.

ஆரம்பமே அக்கப்போராக இருக்கிறதே என்று தமிழிசையிடம் கேட்டபோது, ‘நாங்கதான் கூட்டம் வேணாமேன்னு நினைச்சோம்” என்று அசடு வழிந்திருக்கிறார்.

ஓட்டுப் போடுறதுக்காவது கூட்டம் வேணுமா வேண்டாமான்னு தெரியலையே... கனிமொழிக்கு சுக்ர திசைதான்.