போதைப் பொருள்! 17 வயது சிறுமி! 2 ஆண்கள் சேர்ந்து செய்த கொடூரமான செயல்!

உத்தரப் பிரதேச மாநில்த்தில் வீட்டில் சண்டையிட்டு வெளியேறிய 17 வயதுச் சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பண்டா என்ற நகரைச் சேர்ந்த அந்தச் சிறுமி வீட்டில் உள்ளவர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அருகில் மகோபா என்ற இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ஒரு நபர் அந்தச் சிறுமிக்குத் ஆறுதல் கூறுவது போன்று சிறுமியை அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

அங்கு அந்த நபர் தனக்கு எதையோ ஒரு பானத்தைக் குடிக்கக் கொடுத்ததாக தெரிவித்துள்ள சிறுமி அதன் பின் தான் அரை மயக்க நிலைக்குச் சென்றதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த நபரும், அங்கிருந்த மற்றொருவனும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். எனினும் அந்த இரு நபர்களில் ஒருவனைக் கூட தனக்கு தெரிந்த நபர் என சிறுமி கூறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். வயது வந்த சிறுமி வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறிய நிலையிலும் தேட அக்கறை காட்டாத குடும்பத்தினரின் பொறுப்பற்ற தன்மையும், குடும்பத்தினரை நம்பாமல் எவனோ ஒருவனை நம்பி ஆறுதல் தேடிச் சென்ற சிறுமியின் அறியாமையும் அவளது வாழ்க்கையை சீரழித்துள்ளது.