என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை..! இறைச்சி பிரியர்களுக்கு ஆப்பு

கடந்த வாரம் தமிழகமெங்கும் மீன், ஆட்டுக் கறி வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது. சமூக விலகல் என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு ஒருவரையொருவர் முட்டி மோதினார்கள். இதற்கு ஒரு முடிவு எடுத்திருக்கிறது மதுரை.


ஆம், அப்படியொரு நிகழ்வு மீண்டும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக மதுரை நகர் ஆட்டிறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்கத்தினர், மதுரையில் ஆட்டு இறைச்சி விற்பனையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் கே.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரின் ஆலோசனையின் பேரில் கொடுமையான 'கரோனா' வைரஸ் நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக வரும் 14ம் தேதி வரை மதுரை மாநகரில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூடுவது என்றும், எந்தவிதமான ஆடுகளும் வதை செய்யப்படாது என்றும், ஆட்டு இறைச்சி நடைபெறாது எனவும் அறிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தை மதுரை மக்கள் எப்படி எடுத்துகொள்கிறார்கள் என்று விசாரித்தோம். மதுரை இல்லைன்னா என்னங்க, திருமங்கலம், மேலூர்ல போய் வாங்கிட்டுப் போறோம் என்கிறார்கள்.

டேய்…