மொத்த மீடியாவும் பிராமணர்கள் கையில் இருக்கிறதா..? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!

2018 அக்டோபரில் துவங்கி மார்ச் 2019 வரை,ஏழு இந்தி செய்தித் தாள்கள்,14 தொலைக்காட்சி சானல்கள், 11 இணைய செய்தி போர்ட்டல்கள்,12 பத்திரிகைகளில் இந்தக் கணக்கெடுப்பு நடந்திருக்கிறது.


இந்தியா எதைப் படிக்க வேண்டும்,எதைப் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் 121 நியூஸ் ரூம்களில் 106 யார்தலைமையில் இயங்குகிறது என்று சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தியதில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் நம்பமுடியாதவை.

செதிச்சேனல்களில் நடைபெறும் விவாத மேடைகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் அப்படியே!.மொத்த இந்தியாவில் ஆங்கில இந்தி மீடியா தலைமைகளில் ஐந்து இடங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். மற்ற  அனைத்து இடங்களிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பிராமணர்களும் மற்றும் உயர் வகுப்பினர்கள் மட்டுமே அமர்த்தப் பட்டிருக்கின்றனர்.

செய்தி சேனல்களைப் பொறுத்தவரை சி.என்.என் - நியூஸ் 18,இண்டியா டுடே,மிர்ரர் நவ்,என்.டி.டிவி 24×7,ராஜ்யசபா டிவி,ரிபப்ளிக் டிவி,டைம்ஸ் நவ் ஆகியவற்றில் 89% தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பிராமனர்களே.எஸ்.சி,எஸ்டி,மற்ற பிற்படுத்த வகுப்புகளை சேர்ந்தவர்கள் ஒருவர்கூட இல்லை.

குறிப்பாக இண்டியா டுடே ,டைம்ஸ் நவ் சானல்களில் நடத்தும் விவாதங்களில் கலந்து கொள்வோரிலும் 10% மட்டுமே,எஸ்சி,எஸ்டி,மட்டும் பிற்படுத்தப்பட்டோர் இருக்கிறார்கள். விவாதம் எதைப்பற்றியதாக இருந்தாலும் எஸ்டி இனத்தை சார்ந்தவர்கள் அனுமதிக்கப் படுவதே இல்லை.அந்த விவாதம் ஜாதி விவகாரங்களாக இருந்தாலும் கூட அவர்களை அனுமதிப்பதில்லை.

ராஜ்யசபா டிவியின் விவாத மேடைகளில் பங்கேற்போரில் 70% பேர் பிராமண,மட்டும் உயர் வகுப்பினர் மட்டுமே. அது ஜாதிகள் குறித்த விவாதமாக இருக்குமானால் இந்த எண்ணிக்கை இன்னும் உயர்ந்துப்80.2% ஆகிவிடுகிறது. எஸ்ஸி 8.5%,எஸ்டி 2.2 %,பிற்படுத்தப்பட்டோருக்கு 9.1% மட்டுமே வாய்பளிக்கப்படுகிறது.இந்திச் சேனல்களின் நிலமை இன்னும் மோசம்.நெரியாளர்களில் 80.5% பேர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள்.இந்திய ராஜ்யசபா சேனலில் இது உச்சம்,அங்கே89.1% பேர் பிராமணர்கள்.

செய்தித் தாள்கள்.

இந்திய செய்தித் தாள்களில் 91.7% நியூஸ்ரூம்களின் தலைமை பிராமண மற்றும் உயர் சாதியினரிடம். எக்கனாமிக் டைம்ஸ்.ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து,டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி டெலிகிராஃப் செய்தித்தாளில் எழுதுவோரில் 60% பேர் முற்பட்ட ஜாதியினர்.தி இந்துவில் மட்டும் 26% எழுத்தாளர்கள் ஜாதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறது அந்த கணக்கெடுப்பு.

வணிக செய்திகளில் 72%மும் முதல்பக்கக் கட்டுரைகளில் 62%மும் பிராமண மற்றும் உயர் சாதியினர்தான் எழுதுகிறார்கள்.எஸ்ஸி 1.7%,எஸ்டி0.4%,பிற்படுத்தப்பட்டோர் 1.3% மட்டுமே பங்களிப்பு செய்ய முடிகிறது. குறிப்பாக ஜாதி விவகாரங்கள் என்றால் எக்கனாமிக் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைகளில் முழுக்க முழுக்க பிராமண மற்றும் உயர்ஜாதி எழுத்தாளர்கள் மட்டுமே எழுதுகிறார்கள்.

இந்தி தொலைக்காட்சிகளை விட செய்தித்தாள்களின் நிலமை இன்னும் மோசம்.87.5% தலைமை உயர் ஜாதியினரிடம்தான் இருக்கிறது. அமர் உஜாலா,நவ்பாரத் டைம்ஸ், ராஜஸ்தான் பத்திரிகா,பஞ்சாப் கேசரி உட்பட முதலிடத்தில் இருக்கும் ஏழு இந்திச் செய்தி தாள்களில் எஸ்சி,எஸ்டி,ஒபிசி பிரிவைசேர்ந்த ஒருவர்கூட தலைமைப் பொறுப்பில் இல்லை. இணைய செய்தி உலகிலும் இதே நிலமைதான்,அங்கும் 82% தலைமைப் பீடங்களில் அவர்கள் தான் இருக்கிறார்கள்.

இதில் தமிழகத்தில் நிலமை சற்றே ஆறுதலாக இருக்கிறது. அதிகம் விற்கும் நான்கு செய்தி தாள்களில் மூன்று பிராமண மற்றும் உயர்சாதியினரின் கையில் இருக்கிறது. அதில் வேலை பார்ப்பவர்களில் எல்லா சாதியினரும் இருந்தாலும்,அவர்கள்   பிராமண வழியிலும், மொழியிலும் பழக்கப்பட்ட பிறகு தலைமை பொறுப்புகள் தரப்படுகின்றன.இந்த மூன்றில் ஒரு பத்திரிகை இந்துக்கள் அல்லாதவர்களை பணியில் சேர்ப்பதே இல்லை.

தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லாச் சானல்களுமே பிற்படுத்தப் பட்டோரிடத்தில் இருந்தாலும் முதலாளிகள் அரசுக்கு அஞ்சுவதாலும்,அரசை அதே 3% ஆட்டி வைப்பதாலும் தலைமதைத் தங்கள் வசதிக்குத் திருப்பிவிடுகிறார்கள்.கேரளத்திலன் முக்கிய செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி சானல்கள் கிறிஸ்த்தவ மற்றும் இடதுசாரிகளிடம் இருப்பதால் இந்தியாவிலேயே சற்றேனும் ஜனநாயம் உள்ள மீடியா உலகம் என்று மலையாளத்தை மட்டுமே சொல்லலாம்.