அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! 1 மணி நேரத்தில் 16 காளைகளை அடக்கிய நாடார் சமுதாய இளைஞன்! குவியும் பாராட்டு!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற இளைஞனுக்கு நாடார் மகாஜன சங்கம் பாராட்டு தெரிவித்து உள்ளது!


இது தொடர்பாக நாடார் மகாஜன சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து கார், 4 பசுமாடுகள், வாசிங் மிசின், பிரிட்ஜ், தங்க நாணயங்கள் என ஏகப்பட்ட பரிசுகளை அள்ளிய நாடார் சமூகத்தை சார்ந்த வீர இளைஞன் ரஞ்சித்குமார் அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

இவர் நமது நண்பர் மதுரை கேட்டு கடை மணிகண்டன் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. போன வருடம் 2019லும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் 15 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து இதே போன்று பரிசுகளை குவித்ததும் இதே மணிகண்டன் அவர்களின் இன்னொரு உடன்பிறந்த தம்பி ராம்குமார் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகமே வியந்து நோக்கும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டிற்கு பெயர்போன அலங்காநல்லூர் களத்தில் தொடர்ந்து வெற்றிகோப்பையை நம் நாடார் உறவுகள் தக்க வைத்திருப்பது மிகவும் பெருமையான விசயம்.

வாழ்த்துக்கள் கேட்டுக்கடை மணிகண்டன் & சகோதரர்கள்!