பிரதமர் மோடிக்கு அலகாபாத் நீதிமன்றம் நோட்டீஸ்! வரலாறு திரும்புமா? மீண்டும் வருமா எமர்ஜென்சி..?

அலகாபாத் உயர்நீதி மன்றத்துக்கு ஒரு ராசி இருக்கிறது. இதே நீதிமன்றத்தில்தான் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று ராஜ் நாராயண் வழக்குத் தொடர்ந்தார். ஆமாம், இந்திரா வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


அதைத் தொடர்ந்துதான், இந்திரா காந்தி எமெர்ஜென்ஸியை கொண்டுவந்தார். இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் முதல் எண்ணற்ற தலைவர்கள் சிறைக்கொடுமையை அனுபவித்தார்கள். ஜார்ஜ் பெர்னாண்டசும் சுப்பிரமணிய சுவாமியும் ஹீரோ ஆனார்கள்.

இன்று அதே அலகாபாத் கோர்டில் இன்றைய பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட எல்லைப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் வழக்கில், பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள்  எல்லைப்படை வீரரான தேஜ் பகதூர் வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு முன்வந்தார். ஆனால், அப்போது அவரது மனு நிராகரிக்கப் பட்டுவிட்டது. அதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் தேஜ் பஜதூர் வழக்குத் தொடர்ந்தார்.

எனக்கு சமமான வாய்ப்பு வழங்கப் படாததால் மோடி வெற்றி பெற்றது செல்லாது.என்று அவர் தொடங்கிய வழக்கை ஏற்றுக்கொண்ட நீதி மன்றம் ஆகஸ்ட்  மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று சொன்னதுடன், இதுகுறித்து பதிலளிக்க மோடி தரப்புக்கு உத்தரவிட்டு இருக்கிறது நீதிமன்றம்.

ஒரு வேளை, மோடிக்கு எதிராக தீர்ப்பு வருமானால் இந்திரா காந்தியைப் போல நாட்டில் மீண்டும் அவசர நிலையை பிரகடனம் செய்து ஆட்சியை தொடருவாரா, சரித்திரம் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கப் போகிறதா என்பதே  இன்றைய தலையாய கேள்வி. ஆ கஸ்ட் 21 ம் தேதிக்கு பிறகு இந்த வழக்கு சூடுபிடிக்குமா? என்பதை ஜனநாயக உலகமே உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்கிறது.