கனிமொழிக்கு கோபம் வந்திருச்சா, புதிய தலைவரா மாறப்போறாராம்? ஊர் சுற்றும் உதயநிதி... டென்ஷனில் அழகிரி

இப்போது தி.மு.க.வில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி தவிர வேறு யாரும் தலைவர்களே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.


பெரியவர் மாவட்டச் செயலாளர்களை மேய்த்துக்கொண்டிருக்க, இளையவர் இளைஞர் அணியில் ஆர்வம் செலுத்தி வருகிறது.

இப்போது திருமணங்களை நடத்திவைப்பதற்கு ஸ்டாலினைவிட, உதயநிதிக்குத்தான் டிமான்ட் அதிகம். அதனால் தமிழகம் முழுவதும் கட்சியை வளர்ப்பதற்கு தீவிரமாக உழைத்து வருகிறார் உதயநிதி. எவ்வளவு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை, உதயநிதியை அனுப்புங்கள் என்று நிர்வாகிகள் அன்போடு அழைக்கிறார்களாம்.

இந்த நிலையில் தி.மு.க.வில் பழைய நிர்வாகிகள் அத்தனை பேரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இத்தனை நாட்களும் ஸ்டாலினுக்கு ஜால்ரா போட்டது போதாதென்று இப்போது உதயநிதிக்கு கைதட்ட வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இவருக்கு கனிமொழி எவ்வளவோ மேல் என்று புதிய தலைவரைத் தேடுகிறார்கள்.

உதயநிதி விவகாரத்தில் கடும் அதிருப்தியில் இருக்கும் கனிமொழி மூலமாக கட்சியை உடைப்பதற்கு பா.ஜ.க. தீவிர முயற்சியில் இருந்து வருகிறதாம். இதற்கு மதுரை அழகிரி மறைமுக ஆதரவு கொடுத்து வருகிறாராம். தேர்தல் நேரத்தில் நிச்சயம் பூகம்பம் வெடிக்கும் என்கிறார்கள். பார்க்கலாம்... பார்க்கலாம்.