போனி கபூரை கூட்டிவைத்து கும்மியடித்த அஜித்! ஸ்ரீதேவி ஆவி அஜித்தை மன்னிக்குமா?

நேர் கொண்ட பார்வை திரைப்படம் ஒருவழியாக ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆகப்போவதாக அறிவிப்பு வெளியானது.


இப்படி ஒரு படம் வெளியாகும் சூழலில், அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்தான். அப்படித்தான் அடுத்து அஜித் நடிக்க இருக்கும் படம் பற்றியும் போனிகபூர் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். மீண்டும் இரண்டாவது படம் தயாரிக்க இருப்பதாகவும், வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

இந்த ட்வீட் சற்று கால தாமதமாகவே அஜித் பார்வைக்குப் போயிருக்கிறது. உடனடியாக கொதிநிலைக்குப் போய்விட்டாராம் அஜித். யாரைக் கேட்டு இந்த அறிவிப்பு வெளியிட்டார், உடனடியாக அவரை வரச்சொல் என்று உத்தரவு போட்டாராம். உடனே போனிகபூரும் அஜித்தை சந்திக்க வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 17 நிமிடங்கள் போனி கபூரை நிற்க வைத்தே திட்டித் தீர்த்தாராம் அஜித். போனி கபூர் சொன்ன, எந்த காரணங்களையும் ஏற்றுக்கொள்ள அஜித் தயாராக இல்லை.

கடைசியாக, நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் அடுத்த படம் தயாரிக்கலாம், இல்லைன்னா போய்க்கிட்டே இருக்கலாம் என்று தெரிவித்துவிட்டாராம். டென்ஷனான போனி, அடுத்த படம் இப்படிப்பட்ட ஒருவரை வைத்து தயாரிக்கத்தான் வேண்டுமா என்று யோசிப்பதாக, இன்று வெளியான பத்திரிகை தகவல் தெரிவிக்கிறது.

ஏன், இந்தக் கோபம் என்று கேட்டால், நேர் கொண்ட பார்வை படத்தில் நடந்த பல்வேறு குளறுபடிகளையும் சேர்த்துவைத்து கும்மியடித்துவிட்டார் என்கிறார்கள். ம்... நல்லா இருந்த அஜித்தும் இப்படியாகிட்டாரேன்னுதான் நம்ம கவலை.