9 ஆண்டு கால திருமண வாழ்க்கை! அழகிய மகள்! மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்! அதிர்ச்சி காரணம்!

அஜித்தின் வீரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்தார்! காரணம் இதுதானா கோபத்தில் ரசிகர்கள்!!


அஜித்தின் வீரம் படம் மூலம் பிரபலமான நடிகர் பாலா, தனது மனைவியை கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் அமைந்துள்ள குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றார். மேலும், இதனை புகைப்படம் ஒன்று வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.  

பாலா அன்பு என்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். மேலும் பாலா அவர்கள், தமிழ் சினிமாவில் காதல் கிசுகிசு, அம்மாஅப்பாசெல்வம், கலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.  

இந்நிலையில், இவர் தமிழில் அஜித்தின் வீரம் படம் மூலம் பிரபலம் ஆனார். கேராவில் முன்னணி நடிகர்களில் ஒருவாரக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.  இதற்கிடையில், கடந்த 2010 ஆம் ஆண்டு கேரளாவில் முன்னனி பாடகியாக உள்ள அம்ருத என்ற பெண்ணை காதலித்து திருமணம் முடித்துள்ளார். மேலும் இந்த தம்பதிகளுக்கு அவந்திகா என்ற அழகிய மகளும் உண்டு. 

திருமணம் வாழ்க்கை நான்றாக இருந்து வந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த செய்தி, வெளி உலகத்திற்கு கசிந்த நிலையில், இருவரும் மறுத்து தெரிவித்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு பாலா தனது திருமணம் வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டாதாக அறிவித்தார். 

இந்நிலையில், பாலா அவர்கள் நேற்று கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் அமைந்துள்ள குடும்ப நீதிமன்றத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். மேலும், இவர்களின் மகள் தாயுடன் இருக்கும் படி நீதிபதி தீர்ப்பும் அளித்திருக்கிறார். இந்த விவாகரத்த்தில் இவர்களின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.