சம்பளம் 15 கோடி! நிவாரணம் 15 லட்சம் ! அள்ளிக் கொடுக்கும் தமிழர்கள்! கிள்ளிக் கொடுத்த அஜீத்!

கஜா புயலுக்கு பல்வேறு நட்சத்திரங்கள் தாராளமாக நிதி வழங்கியிருக்கும்போது, அஜீத் வெறுமனே 15 லட்சம் மட்டும் கொடுத்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் கழுவிக்கழுவி ஊற்றுகிறார்கள்.


கஜா புயலுக்கு அஜீத் ஏன் எதுவுமே கொடுக்கவில்லை என்று அவரது ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். ரஜினிகாந்தியில் இருந்து நேற்று வந்த யோகிபாபு வரை நிவாரண நிதி கொடுத்துவரும் நிலையில், அஜீத் மட்டும் அமைதியாக இருந்தார்.

இந்த நிலையில் அரசு வெளியிட்ட குறிப்பு ஒன்றின் மூலம் அஜீத்குமார் 15 லட்சம் நிதியுதவி கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதனை வெளியே யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார் அஜீத். இந்தத் தக்வல் தெரிந்ததும், எங்க தல எத்தனை அடக்கமா உதவி செஞ்சிருக்கார் என்று அவரது ரசிகர்கள் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தனர்.

அஜீத் செய்த உதவியே இப்போது இணையதளத்தில் ட்ரெண்டிங் நகைச்சுவையாக உலவி வருகிறது. நேத்துவந்த சிவகார்த்திகேயன் 20 லட்சம் குடுத்திருக்கார், விஜய் சேதுபதி 25 லட்சம் குடுத்திருக்கார். எங்க தளபதி விஜய், 40 லட்சம் ரூபாய் கொடுத்ததும் இல்லாம 50 லட்ச ரூபாய்க்கு பொருள் வாங்கிக் குடுத்திருக்கார். இந்த லட்சணத்துல வெறுமனே 15 லட்ச ரூபாயைக் குடுத்துட்டு, அதை வெளியே வேற சொல்லுவாரா... என்று அஜீத் ரசிகர்களை அநியாயத்துக்கு வாருகிறார்கள். 

மேலும் அஜித் தற்போது ஒரு படத்துக்கு சம்பளமாக மட்டுமே 15 கோடி ரூபாய் வாங்குகிறார். அப்படி இருந்தும் வெறும் 15 லட்சம் மட்டும் கொடுத்திருககிறாரா? உங்க தலைக்கு இவ்வளவு தானா மனசு என்றும் கேள்வி கேட்கிறார்கள். மேலும் ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்கள் அஜீத்துக்கு அள்ளி அள்ளி கொடுத்த நிலையில் அவர் மட்டும் புயல் நிவாரணத்திற்கு கிள்ளி கொடுத்திருக்கிறாரே என்றும் கூறப்படுகிறது. இதனால குடுத்தாலும் தப்பு, குடுக்காட்டாலும் தப்பு என்று அஜீத் நொந்துபோக... விஜய் ரசிகர்கள் சொல்வது உண்மைதானே என்பதால் பதிலுக்குப் பொங்கமுடியாமல் தல ரசிகர்கள் அமைதி காக்கிறார்கள். பொங்கலுக்குப் பாருங்கடா எங்க வேடிக்கையை என்று மனதுக்குள் கருவுகிறார்கள்