அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்! இது மதுரை கலாட்டா!

தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்று எந்த விவகாரம் குறித்தும் கருத்து தெரிவிக்காதவர் அஜித்.


ஆனால், அவரது ரசிகர்கள் அப்படி இருக்கவில்லை என்பதுதான் உண்மை.கருணாநிதி முன்பு மேடை ஏறி, நட்சத்திரங்களுக்காக குரல் கொடுத்தார். அதற்கு அரசியல்வாதிகள் சொல்லிக்கொடுத்த பாடம் ரொம்பவே அதிகம். அதனால் அரசியல் விவகாரங்களில் அவர் ஒருபோதும் தலையிடுவது இல்லை.

ஆனால், அவரது சினிமா எதிரியான விஜய் அவ்வப்போது அரசியல் பேசிவிடுகிறார், விஜய்யின் அப்பா விரைவில் அரசியலுக்குள் நுழைவார் என்று பேசிவருகிறார். அதனால் தங்கள் பங்குக்கு அஜித்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட மதுரை ரசிகர்கள் இப்போது அஜித் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒரு போஸ்டர் ஒட்டிவிட்டார்கள்.

கட்சி ஆரம்பிக்கிறார்களோ இல்லையோ போஸ்டர் ஒட்டி விஜய்க்கு முன்பே அஜித்தை அரசியலுக்கு அழைத்துவந்துவிட்டனர்.

இந்த போஸ்டரை ஒட்டி பரபரப்பைக் கிளப்பியிருப்பவர் மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர் ரைட் சுரேஷ். அஜித் ரசிகர் மன்றத்தில் இல்லாத இவரை எப்படி ரசிகர் வட்டத்தில் இருந்து நீக்குவது என்று தெரியாமல் தடுமாறுகிறாராம் அஜித்.

ஆனா, கட்சி பெயர் சூப்பருங்கோ. இன்னொரு அ.தி.மு.க.