ரூ.599க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சத்துக்கு பலன்! ரிலையன்ஸ் ஜியோவை தெறிக்கவிடும் ஏர்டெல் ஆஃபர்!

டெல்லி: ரூ.599க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சத்திற்கான பொருள் ஒன்றை இலவசமாக வழங்க உள்ளதாக, ஏர்டெல் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தொலைத்தொடர்பு சேவையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் வர்த்தகம், ஜியோவின் வருகையால்,  கடந்த சில ஆண்டுகளாகவே, சரிவுடன் காணப்படுகிறது. இதனை அதிகரிக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் புதுப்புது சலுகை அறிவிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது. இதன்படி, தற்போது ரூ.599க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.4 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் பாலிசி இலவசமாக தரப்படுவதாக, ஏர்டெல் அறிவித்துள்ளது. 

இதன்படி, ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.599 பேக்கேஜை ரீசார்ஜ் செய்வதன் மூலமாக, நாள்தோறும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால் செய்யும் வசதிகளையும், பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக, ரூ.4 லட்சம் மதிப்புடைய ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் இலவசமாக பெற முடியும். 84 நாட்களுக்கு ஒருமுறை இந்த பேக்கேஜை ரீசார்ஜ் செய்யும்போது, ஆயுள் காப்பீடும் தானாகவே புதுப்பிக்கப்படும் என்பது இதில் உள்ள கூடுதல் அம்சமாகும்.  

இந்த இலவச இன்சூரன்ஸ் பாலிசி வழங்கும் திட்டத்திற்காகவே, ஏர்டெல் நிறுவனம், பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது. தற்சமயம் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இந்த திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

நீங்கள் குறிப்பிட்ட ரூ.599 பேக்கேஜை ரீசார்ஜ் செய்யும்போது, இலவச இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய ஒரு எஸ்எம்எஸ் உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும். அதனை பயன்படுத்தி உங்களின் அருகாமையில் உள்ள ஏர்டெல் சில்லறை விற்பனையாளர் மையம் அல்லது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலமாக இலவச இன்சூரன்ஸ் பாலிசியில் பதிவு செய்துகொள்ளலாம். 18 முதல் 54 வயது வரையான அனைவருக்கும் இந்த பாலிசி பொருந்தும் என, ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.