அதே காசு..! ஆனா 42ஜிபிக்கு பதில் 84ஜிபி! ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் நிறுவனம்! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

ஜியோ தனது இலவச கால்களுக்கு கட்டணத்தை உயர்த்தியது முதலாக ஏர்டெல் பலமான ஆபர்களை அள்ளி தெளித்த வண்ணம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்க போராடும் நிலையில், கோதாவில் தற்போது வோடாபோனும் இணைந்துள்ளது.


இலவசமாக வாய்ஸ் கால்களை விட , இண்டர்நெட் டேட்டா ஆபர்கள் மூலமாக வாடிக்கையாளர்களை கவர் பண்ண நினைத்த வோடாபோன். 199 ரூபாய் பிரீபெய்ட் ரீசார்ஜ்க்கு இதுவரை 1.5 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்கியது. இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள். 

புதிய பிளானில், டேட்டா வரம்பை 1.5 ஜிபியில் இருந்து 3 ஜிபி உயர்த்தி, 84 ஜிபி இண்டர்நெட் டேட்டா வழங்க உள்ளது. மேலும் , 399 ரூபாய் பிரீபெய்ட் ரீசார்ஜ் க்கு இதுவரை 1 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் , தினசரி 100 எஸ்எம்எஸ் வேலிடிட்டி காலம் 84 நாட்கள். தற்போது டேட்டா வரம்பை 1 ஜிபி - 2 ஜிபி என்னும் அளவில் உயர்த்தி, 3 மாதத்துக்கு 84 ஜிபி என்றளவில் இருந்த டேட்டா தற்போது 168 ஜிபி என அறிவித்துள்ளது. 

இந்த ஆபர்களை பெற வோடாபோன் ப்ரீபெய்ட் பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை வோடபோன் வலைத்தளம் / MyVodafone App மூலமாக பெற்று கொள்ள முடியும். 

இந்த ஆபர் எப்போது முடியும் என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. எனினும் தற்போது மும்பை, ஆந்திரா, சென்னை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய சர்க்கிள்களில் இந்த ஆபர் கிடைக்கும் என்பதை டெலிகாம்டால்க் என்னும் தளம் உறுதி செய்துள்ளது.