ஏர்போர்ட்டில் நடக்க முடியாமல் நடந்து வந்த பெண்! ஸ்கேன் செய்த போலீசாரை அதிர வைத்த காட்சி! இப்படியுமா நடைபெறும்?

கொலம்பியாவில் தொடையில் போதைப்பொருள் வைத்து தைத்து கடத்த முயன்ற பெண்ணை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது


 கொலம்பியாவின் ஏல்டோரா விமான நிலையத்தில் பெண் ஒருவர் காலில் அடிபட்டது போல் நடித்து நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து சந்தேகித்த விமான நிலைய காவல் அதிகாரிகள் அவரிடம் சென்று விசாரித்தனர்.

அதில் அவருக்கு தொடையில் தையல் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் சந்தேகம் தீராத காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று எக்ஸ்ரே செய்து பார்த்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது. 

அதில் பெண்ணின் உள் சதைப்பகுதிக்கும் மேல் சதைப் பகுதிக்கும் இடையே பை போன்ற அமைப்பு இருப்பதாக எக்ஸ்ரேயில் தெரியவந்தது. இதன் பின் அவரை கொலம்பியாவில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது அவரது தொடையில் இருந்து திரவ நிலையில் இருக்கக்கூடிய கோகைன் போதைப் பொருள் எடுக்கப்பட்டது. 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் என்னை போன்று வறுமையில் சிக்கித் தவிக்கும் நபர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு போதைப் பொருளை இவ்வாறு கடத்திச் சென்று வந்தால் 1400 முதல் 3 ஆயிரம் டாலர்கள் வரை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்தார்.

இது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித உடலுக்குள் வைத்து போதை பொருள் கடத்தும் அளவிற்கு இந்த மாஃபியா கும்பல் வளர்ந்து விட்டது என்று விசாரணை மேற்கொண்ட வில்சன் என்ற அதிகாரி பிரம்பிப்புடன் தெரிவித்துள்ளார். தற்பொழுது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.