கணவனுடன் தினமும் செக்ஸ்? பெண் பைலட்டுக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்!

ஏர் இந்தியா விமானத்தின் மூத்த கேப்டன் சக பெண் விமான ஓட்டுனரிடம் தகாத கேள்விகள் கேட்டதாக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.


இது குறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி, மூத்த கேப்டன் மீது கொடுக்கப்பட்ட புகார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, உண்மை என நிரூபிக்கப்பட்டால் விரைவில் கேப்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும் பெண் விமான ஓட்டுநர் அளித்த புகாரில், "நான் அவருடன் இரண்டு முறை பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். அப்போது நன்றாக நடந்து கொண்டார். பயிற்சி முடிந்த பிறகு ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் விருந்து அளிப்பதாக என்னையும் இன்னொரு பெண்ணையும் அழைத்தார்.

அப்போது அவர் என்னிடம் தனக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் கஷ்டம் அளிப்பதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு அடுத்ததாக நீ உன் கணவருடன் எப்படி சந்தோஷமாக இருக்கிறாய்? சந்தோசமான வாழ்க்கையை மேற்கொள்ள தினமும் உடலுறவு கொள்ள வேண்டுமா? என பல கேட்கக்கூடாத கேள்விகள் எல்லாம் கேட்டார். அதற்கு நான் பதில் அளிக்காமல் உடனடியாக ஹோட்டலை விட்டு வெளியேறி, வீடு திரும்பி விட்டேன். இதுகுறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளேன்" என்றார்.