சென்னை, திருச்சி, சேலத்தில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சென்னை, திருச்சி, சேலத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.


மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆண்டு தோறும் தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2017 – 2018 நிதி ஆண்டுக்கான கணக்கெடுப்பு விவரங்களை மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள் விவரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓராண்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.



   அதன் படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் கடந்த ஆண்டு அதிக எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகியுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை மருத்துவமனைகளில் 10,527 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இந்த அளவிற்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு பதிவாகவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

   கடந்த 2017-2018ம் ஆண்டில் சேலத்தில் 751பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருச்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் 623 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சென்னையை ஒப்பிடும் போது திருச்சி, சேலத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிகை குறைந்துள்ளது போல் தோன்றும், ஆனால் மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

  எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு எய்ட்ஸ் நோயாளிகள் உருவாதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. வெறும் எண்ணிக்கையை மட்டும் கண்டறிவதால் பலன் இல்லை என்றும் நோயாளிகளை ஆய்வு செய்து அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது எப்படி என்பதை கண்டறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.