ஹாலிவுட் சீரியலை பார்த்து லலிதா ஜூவல்லரியை மொட்டை அடித்த எய்ட்ஸ் முருகன்! கூட்டாளிகள் வெளியிட்ட திடுக் தகவல்!

பொதுவாக தமிழகத்தில் கொலை ,கொள்ளை வழக்கில் கைதாகும் குற்றவாளிகள் ஏதாவது ஒரு தமிழ் சினிமாவின் பெயரைச் சொல்லி,அதைப் பார்த்துத்தான் செய்தேன் என்பது வழக்கம்.


இப்போது,திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் பிடிபட்ட மணிகண்டன் என்கிற கொள்ளையன் முதல் முறையாக தங்களுக்கு வழிகாட்டியது,நெட்ஃபிலிக்ஸில் ஒளிபரப்பான Money heist என்கிற ஸ்பானிய மொழி சீரீஸ்தான் என்று சொல்லி , தமிழகத் திருடர்களும் குலோபலைஷேனில் இறங்கி விட்டதைச் சொல்லி போலீசை அதிர வைத்திருக்கிறார்.

'லா சா டி பேபல் ' என்கிற பெயரில் வெளியான இந்த சீரீஸ் ஸ்பெயின் நாட்டின் மத்திய வங்கியைக் கொள்ளையடிக்கும் திருடர்களைப் பற்றியது.தமிழக ரவுடிகள் கொள்ளையர்கள் மற்றும் கிரிமினல்களை தொடர்ந்து கண்காணித்து வரும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்,சி.சி டிவியில் காட்சிகளில் காணப்பட்ட கொள்ளையர்கள் அணிந்திருந்த செருப்புகள்,

அவர்களின் காலின் நிறம் ஆகியவற்றை வைத்து,கொள்ளையர்கள் வடமாநிலத்தவர் அல்ல,உள்ளூர் ஆசாமிகளே என்று உறுதி செய்தார்.அதை அவளவாக ஏற்றுக்கொள்ள மறுத்த உயரதிகாரிகள் இப்போது பிடிபட்டிருக்கும் திருவாரூர் மணிகண்டன் வாக்கு மூலத்தை கேட்டு அதிர்ந்து நிற்கிறார்கள்.மணி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் 'புரபஸர்' என்கிற கதாபாத்திரம் போலவே வீடு,

வாசல் இல்லாமல் ஒரு வேனிலேயே வாழ்ந்து வரும் முருகன் என்பவர் தந்த ஐடியாக்களின் மூலமாகவே தாங்கள் லலிதா ஜுவல்லரி கொள்ளையை நிகழ்த்தியதாகவும்,அதற்காக தான் தொடர்ந்து மணிஹெய்ஸ்ட் தொடரைப் பார்த்ததாகவும் சொல்லி இருக்கிறான்.

ஆனால்,மணி ஹெஸ்ட் தொடரில் வரும் புரபஸ்ர் கேரட்டர் போலில்லாமல் முருகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.ஆனால் சன்பந்தப் பட்ட முருகன் எய்ட்ஸ் நோயாளி என்பதால் அவரை பிடிப்பதில் தமிழக போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுகிறாரகள்.