முதல்வர் பழனிசாமிக்கு குவிகிறது பாராட்டு..! தமிழக அரசு பணிக்கு வயது உச்ச வரம்பு அதிகரிப்பு..!

தமிழக அரசு சார்பில், ஒருசில பணிகளுக்கு மட்டும் நேரடியாக நியமனம் நடப்பது உண்டு. இந்தப் பணிகளில் சேர, குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு. இதைவிட கூடுதலாக படித்திருந்தால் பணி கிடைக்காது.


இப்பணியில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்ச வரம்பு, 30 ஆக இருந்தது. 

தற்போது அது மாற்றப்பட்டு நேரடியாக பணி நியமனம் செய்யப்படும் பணிகளில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்ச வரம்பு, 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பை உயர்த்தி, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை, அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதிகப்படியான மக்கள் பயன் அடையும் வகையில் வயது வரம்பை உயர்த்தி உத்தரவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு அமைப்புகள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.