இலங்கையில் மீண்டும் ராஜபக்‌ஷே ராஜாங்கம் ஆரம்பம்! தமிழர்கள் நிலை என்னவாகும்? இலங்கை குண்டுவெடிப்புதான் காரணமா?

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோர் இடையில் கடுமையான போட்டி நிலவியது.


நேற்று வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே, ஓட்டுக்களை எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பகட்டத்தில் தமிழர் பகுதியில் பிரேமதாசாவும், சிங்களர் பகுதியில் கோத்தபயவும் முன்னணியில் இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் இந்த வாக்கு எண்ணிக்கை திசை மாறியது.

வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளுக்கும் மேல் பெற்று கோத்தபய ராஜபக்சே முன்னிலைக்குச் செல்லவே, இலங்கை அதிபர் தேர்தலில் தனது தோல்வியை சஜித் பிரேமதாசா ஒப்பு கொண்டார். மக்களின் முடிவை தலைவணங்கி ஏற்கிறேன் என்று அறிவித்துள்ளார். இன்று மாலையே கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறார். .

இந்த வெற்றியின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை தடுப்பதற்கு ஆளும் அரசு சரவர நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபம்தான் இந்த தேர்தல் வெற்றியில் தெரியவருவதாக இலங்கை பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.