தமிழகத்திலும் மூளை காய்ச்சல்! கோவை இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

பீகார் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பரவி மூளைக்காய்ச்சலில் இது வரை நோய் பாதிப்பால் 117 பேர் மாநில அளவில் பாதிக்கபட்டதை அடுத்து மேலும் ஒருவர் பலி!


வட மாநிலத்தில் 'அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்' மற்றும் 'ஜப்பான் என்சபிலிட்டிஸ்' என பரவி வரும்  மூளைக்காய்ச்சலால், பாதிப்பு அடைந்ததை அடுத்து, நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பல்வேறு கட்ட ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், கோவை சரவணம்பட்டி அருகே, விநாயகபுரத்தை சேர்ந்த ரம்யா (வயது 21) கடந்த சில நாட்களாக  காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில்,கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூளைக்காய்ச்சல் உறுதியானதை அடுத்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கனவே, மூளைக்காய்ச்சலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,  கோவை இளம் பெண் பலியான சம்பவத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அரசு சார்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.