அஜித் பவாருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி ! ஆதரவும் எதிர்ப்பும் !

மகாராஷ்டிர துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் அஜித் பவாருக்கு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுகுறித்து பதில் அளித்துள்ள அஜீத் பவார் தனக்கு பதவி தருவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் தெரிவித்தார். மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர்க உத்தவ் தாக்கரே பதவியேற்றதுபோது அஜீத் பவாரையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அவர் பாஜவுடன் கைகோர்த்ததா, உடனடியாக எந்த பதவியும் தரவேண்டாம் என சரத்பவார் முடிவெடித்திருந்தார். மகாராஷ்டிர அமைச்சரவை டிசம்பர் 30ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அஜித் பவார் தெரிவிக்கையி, ‘இந்த விஷயத்தில் எனது நிலைப்பாட்டை நான் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன். கட்சித் தலைமையின் உத்தரவுப்படி செயல்படுவேன்.’ என தெளிவுபடுத்தினார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி, மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் உள்ளது. இக்கூட்டணியில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. முன்னதாக பாஜகவுக்கு அஜித் பவார் ஆதரவு தெரிவித்தபோது, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனா். ஆனால், பெரும்பான்மை இல்லாமல் 3 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தனர். 

இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்ற பின் கூட்டணியில் சிவசேனைக்கு 15 அமைச்சா்கள், தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வா் பதவி உள்பட 15 அமைச்சா்கள், காங்கிரஸுக்கு 13 அமைச்சா்கள் மற்றும் சட்டப்பேரவைத் தலைவா் பதவி அளிக்கப்படும் என 3 கட்சிகளும் உடன்பாடு மேற்கொண்டுள்ளன.