11 மற்றும் 12ம் வகுப்புகளில் புது பாட முறை திட்டம் ரத்து, மீண்டும் பழையபடி பாடத்திட்டங்கள்.

கொரோனா பரீட்சையில் தொடங்கி, கல்வித் துறை விடுக்கும் ஒவ்வொரு அறிவிப்புக்கும் பிறகு மீண்டுமொரு அறிவிப்பு வருவது வழக்கமாகிவிட்டது. சொல்லப்போனால் அவ்வப்போது பல்டி அடித்துக்கொண்டே வருகிறது.


அந்த வகையில் சமீபத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி பழைய பாடத்தொகுப்பு முறையில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம்பெற்றிருந்ததை மாற்றி புதிய முறைப்படி 3 பிரிவுகளில் மட்டுமே இந்தப் பாடங்கள் இடம் பிடித்தது. மேலும், 6 பிரிவுகளில் இருந்த கணிதப்பாடம் புதிய பாடத்தொகுப்பில் 2 பிரிவுகளில் மட்டுமே இடம்பெற்றது. 

இப்படி மாற்றம் செய்வதால் போட்டித்தேர்வுகளை எழுதுவதிலும், தேசிய மற்றும் உலகளவில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும், உயர்கல்வி படிப்பதிலும் தமிழக மாணவர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்று கல்வியாளர்களும், அரசியல் கட்சியினரும் கடையாக எச்சரிக்கை செய்தனர்.

இதனையடுத்து 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டத்தை ரத்துசெய்து, மீண்டும் பழையபடி ஆறு பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

செங்கோட்டையனுக்கு பொழுதுபோகவில்லை என்றால் இப்படித்தான் விளையாடிக்கொண்டே இருப்பாரோ..?