மீண்டும் அய்யாக்கண்ணு அட்டகாசம் ஆரம்பம்! இன்று நாமம் அணியும் போராட்டம்!

விவசாயிகள் போராட்டத்தை இந்திய அளவில் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம், புரட்சிகரமாக மாற்றியவர் அய்யாக்கண்ணுதான்.


எலியை வாயில் கவ்வியபடி போராட்டம், கோமணம் அணிந்து, அதுவும் அணியாமல், தூக்கு கயிறு போராட்டம் என்று டிசைன் டிசைனாக போராட்டம் நடத்தினார். பின்னர் ஒருவழியாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். ஆனால், அதன்பிறகும் எவ்விதமான தீர்வும் ஏற்படவில்லை என்பதுதான் வருத்தமான விஷய்ம்.

இந்த நிலையில், இன்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் திருச்சி ஜங்சன்-ல் நாமம் அணிந்துகொண்டு தொடங்கியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்கவில்லை. அதனை உடனடியாக வழங்கவேண்டும் என்றும், அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும், காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர், - அய்யாறு, - உப்பாறு இணைப்பு திட்டம்,

காவிரி, குண்டாறு, வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும், கோதாவரி ,- காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும், இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளதும். 

இது தவிர, ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும், தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோரிக்கைகளுக்காக ஒரு வார காலம் நாமம் அணிந்து போராடுவதை தொடங்கியுள்ளார் அய்யாக்கண்ணு. மோடி, அமித்ஷாவை ஏதாவது செஞ்சிடுவோம்னு சொன்னா போலீஸ் நடவடிக்கையாவது எடுக்கும். இதுபோன்ற நியாயமான போராட்டங்களுக்குத்தான் தீர்வு இல்லையே!