20 நிமிடங்கள் ருத்ரதாண்டவம்! பாகிஸ்தானியர்களுக்கு மரண பயத்தை காட்டிய இந்திய போர் விமானங்கள்!

இந்திய போர் விமானங்கள் சில நிமிடங்களில் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டு சென்றதாக தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் கூறியுள்ளனர்.


தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் இரண்டு பகுதிகள் மற்றும் பாகிஸ்தானின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இடத்தில் இந்தியாவின் 12 போர் விமானங்கள் தாக்குதலை அரங்கேற்றின.

இது குறித்து அங்குள்ள பாகிஸ்தானியர்கள் பீதியுடனும் பதற்றத்துடனும் தகவல்களை பறிமாறி வருகின்றனர். பிபிசி தொலைக்காட்சி தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள பாகிஸ்தானியர்களிடம் பேட்டி எடுத்துள்ளது.

அப்போது பேசிய பாகிஸ்தானியர்கள், திடீரென நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தோம். உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டது.

விமானங்களும் பறந்து கொண்டிருந்தது. எங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. சரமாரியாக குண்டுகள் விழுந்தன. ஆங்காங்கே நெருப்பு பற்றி எரிந்தது.

பிறகு காலையில் தான் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறினார்கள். இந்த தாக்குதலில் எனது உறவினர் உள்ளிட்ட சிலரும் காயம் அடைந்துள்ளனர்.

இந்த  பேட்டி அளித்த பாகிஸ்தானியர் கண்களில் மரண பயம் தெரிந்தது. மேலும் அவர் விமானப்படை தாக்குதலை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருந்து சுத்தமாக மீளவில்லை.

இதே நிலை தான் பாகிஸ்தான் மக்கள் பலருக்கும் இன்று இருந்துள்ளது. ஏனென்றால் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் அப்படி.