திருமணமான 10 வருடங்களுக்கு பிறகு இரட்டை குழந்தை! டிவி நடிகர் மனைவியுடன் ஆனந்த கண்ணீர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரஜின்.


சின்னத்திரையில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் இவர். இவருக்கும் இவரது காதலி சான்ட்ரா என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆனது. இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் திருமணம் செய்தபோது இதில் இவர்கள் இருவருக்கும் யாரும் பெரிதாக சப்போர்ட் செய்ய வில்லை. அப்போது ஒருநாள் உணவிற்கே கஷ்டப்பட்ட இருவரும் தற்போது குழந்தை வேண்டாம் என தள்ளி வைத்தனர்.

 பத்து வருடங்கள் கழித்து குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்த இருவரும் அப்படியே வாழ்ந்து வந்தனர்

 பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரஜின் தனது மனைவி சான்ட்ரா கர்ப்பமாக உள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தார்

 இந்த செய்தி தற்போது இருவருக்கும் டபுள் சந்தோஷமாக வந்து சேர்ந்துள்ளது அதாவது இருவருக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது .