ரயில் நிலையத்தில் பெற்ற மகனை பரிதவிக்கவிட்டுச் சென்ற தாய்! 6 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்! தஞ்சையில் உருக்கம்!

கரூர்: தாயை பிரிந்து வாடிய சிறுவன், 6 மாதத்திற்குப் பின் மீண்டும் தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டான்.


கரூர் ரயில் நிலையத்தில், 6 மாதங்களுக்கு முன்பாக, தருண் என்ற 5 வயது சிறுவன் மீட்கப்பட்டான். பெற்றோர் இன்றி தனியே சுற்றி திரிந்த அவனை தஞ்சை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு, பாதுகாத்து வந்தனர்.

அந்த சிறுவனுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதியை செய்துகொடுத்த அவர்கள், சிறுவனின் பெற்றோர் பற்றி பல வழிகளிலும் தேடுதல் மேற்கொண்டனர். இதுதொடர்பாக, பத்திரிகை ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வழியாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

இதன்படி, ஒருவழியாக, 6 மாதத்திற்குப் பின், சிறுவனின் பெற்றோர், சம்பந்தப்பட்ட குழந்தைகள் நலக்குழுவினரை சந்தித்து, தருண் தங்களது மகன்தான் எனக் கூறினர். இதையடுத்து, சிறுவன் தருணை, அவனது பெற்றோரை வரவழைத்து, நேரில் இன்று (ஆகஸ்ட் 9) ஒப்படைத்தனர். இதன்போது, ''ஏன் என்னை இத்தனை நாளாக பார்க்க வரவில்லை?,'' என்று சிறுவன் தருண் கேட்க, அவனது தாயும், தந்தையும் கதறியழுத காட்சி காண்போரை நெகிழச் செய்தது.

இந்த சிறுவனை வெற்றிகரமாக மீட்டு, பாதுகாத்து வைத்திருந்து, பெற்றோரிடம் ஒப்படைத்த குழந்தைகள் நலக்குழுவின் தஞ்சை மாவட்ட தலைவர் திலகவதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.