இரண்டு பாறைகளுக்கு நடுவே சிக்கிய இளைஞன்! நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட அதிசயம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவின் நாம்பென் நகரம் வவ்வால்களின் கழிவு உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது பட்டாம்பாக் என்ற வடமேற்கு மாகாணத்தில் வசித்து வரும் சம் போரா என்பவர் வவ்வால்களின் கழிவை சேகரிப்பதற்காக அங்குள்ள குகைப்பகுதிக்குள் சென்றுள்றார்.


அப்போது ஒரு இடத்தில் வவ்வால்களின் கழிவுகள் அதிகமாக இருப்பதை பார்த்த இளைஞர் சம்போரா அங்கு செல்வதற்கான வழியை தேடினார். ஆனால் இருபாறைகளுக்கு நடுவில் உள்ள சிறிது இடைவெளி மட்டுமே அந்த வவ்வால்களின் கழிவுகள் இருக்குமிடத்திற்கு செல்ல வழி இருந்தது. கொஞ்சம் சிரமம் என்றால் உயிரை பணயம் வைத்துதான் அந்த இடத்தை கடந்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் மெதுவாக அந்த பாறை இடைவெளியில் நுழைந்தார்.

அப்போது சாம்போராவின் உடல்வாகு கொஞ்சம் பெரிதாக இருப்பதால் பாறையில் சிக்கிக்கொண்டார். பின்னர் பாறையை கடக்க முடியாமலும், மீண்டு வெளியில் வரமுடியாமலும் சிக்கிக்கொண்டார். இப்படியே 3 நாட்கள் வேறு வழியின்றி உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் வவ்வால்களின் கழிவுகளை சேகரிக்க சென்ற சாம்போரா காணவில்லையே என உற்றார் தேடிவந்தநிலையில் பாறை இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு  விரைந்து சாம்போராவை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எ

மனுக்கு அருகில் சென்று மீண்டு வந்த சாம்போரா கூறுகையில் தான் உயிரோடு வருவேன் என்று நினைக்கவில்லை எனவும் பாறை இடிபாடுகளில் சிக்கி சித்திரவதையை அனுபவிப்பதை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் எண்ணினேன். அப்போது மட்டும் கையிலே ஏதேனும் ஆயுதம் இருந்திருந்தால் கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்திருப்பேன் என்றும் சாம்போரா வேதனையுடன் தெரிவித்தார்.

இதை பார்க்கும்போது நம்மூரில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இடுக்குப்பிள்ளையார் என்ற கோயில் உள்ளது. அங்கு ஒரு பாறையில் சிறிதளவு இடைவெளி இருக்கும்.அதில் நுழைந்து வெளியில் வந்தால் இறைவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்த இடைவெளியில் குண்டாக இருப்பவர்கள் கூட அதில் நுழைந்து வெளியில் வருவதற்கு மிகவும் கஷ்டப்படுவதை நாம் பார்த்திக்கிறோம். சில சமயத்தில் உள்ளே மாட்டிக்கொண்டவர்களை அருகில் இருப்பவர்கள் இழுத்து வெளியே போடும் காட்சிகள் தான் சாம்போராவை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.