படுக்கை அறையில் மூடு வந்தாலும்..! விறைப்புத்தன்மை பிரச்சனையா? அப்போது நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

உடறுவின்போது விறைப்புத்தன்மை பிரச்சனை இருந்தால் அதை இயற்கை முறையிலான கெகல் மற்றும் ஏரோபிக் பயிற்சிகள் மூலம் சரி செய்து நீண்ட இன்பத்தை காணலாம்.


உடலுறவின்போது பெரும்பாலான ஆண்களுக்கு விறைப்புத்தன்மை ஒரு பிரச்சனை. இதனால் ஆண்கள் எரிச்சல் ஆவதுடன், சங்கடத்திற்கு ஆளாகின்றனர். விறைப்புத்தன்மை பிரச்சனை இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படலாம்.

முறையான உடற்பயிற்சி செய்தால் சாதாரண விறைப்பு செயல்பாட்டை மீட்டெடுத்ததுடன், கூடுதலாக 33.5 சதவீத ஆண்களுக்கு விறைப்பு செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இடுப்பு தசைகளை வலுவாக்க கெகல் உடற்பயிற்சி சிறந்தவை. இது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், ஆண், பெண் இருபாலருக்கும் சமமான பலன் கிடைக்கும். இதனால் விறைப்புத்தன்மையின் போது உந்துவதற்கும், சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப்பையை காலியாக்குவதற்கும் உதவுகிறது.

கெகல் பயிற்சியை செய்ய ஆரம்பிக்கும் போது, ஆரம்பத்தில் தொடர்ந்து 10 முறை செய்வது முடியாத காரியமாகும். மன அழுத்தம் அதிகரித்தால், உடலில் இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, விறைப்புத்தன்மை பிரச்சனை மேலும் தீவிரமாகலாம். எனவே மன அழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்.

ஏரோபிக்ஸ் பயிற்சி விறைப்புத்தன்மை செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஒருவர் தினமும் 30 நிமிடம் சுறுசுறுப்பான மற்றும் வேகமான நடைப்பயிற்சியை மேற்கொண்டு வந்தாலே மாற்றத்தை உணர முடியும். மூலிகைகள் மூலம் விறைப்புத்தன்மை பிரச்சனை சரி செய்யலாம் என்று சொல்வதை நம்பவேண்டாம்.

ஒருவேளை இந்த பயிற்சிகளை மேற்கொண்டும் எவ்வித முன்னேற்றமும் தெரியாவிட்டால், மருத்துவரை அணுகுவது நல்லது. விறைப்புத்தன்மை பிரச்சனை இருந்தால், வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல், தொடர்ந்து அதை எதிர்த்துப் போராடும் வழிகளைத் தேடி போராடுங்கள். இதனால் நிச்சயம் பிரச்சனையை சரிசெய்ய முடியும்.