தலைமை நீதிபதி தஹில் ரமானிக்காக போராடிய வழக்கறிஞர்கள்! சபாஷ் தமிழகம்!

சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை சமீபத்தில் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.


இதனை மறுபரிசீலனை செய்யுமாறு தஹில் ரமானி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.தமிழகத்தில் இருந்து மேகலாயாவுக்கு மாற்றம் செய்வது பழி வாங்கும் நடவடிக்கை என்று பேசப்படுகிறது. அதனால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிட மாற்றம் செய்வது நியாயமற்றது எனக் கூறி தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அறிவித்தபடி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னைமட்டுமின்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை, நெல்லை, சேலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் என தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களும் தலைமை நீதிபதிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தலைமை நீதிபதிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.

உச்ச நீதிமன்ற கொலிஜியம் வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கிறது. தலைமை நீதிபதி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழுவைச் சந்திக்கவுள்ளோம். தஹில் ரமானி தன்னுடைய சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பாராட்டுக்குரியது என்று பாராட்டி வருகின்றனர்.

பெண் நீதிபதியிடம்கூட இரக்கம் காட்ட மறுக்கிறார்களே..?