ஒரு பார்ப்பனராக இருப்பதன் அனுகூலங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் பேராசிரியர் திலீப் மண்டல்..

ஒரு பார்ப்பனராக இருப்பதன் அனுகூலங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் பேராசிரியர் திலீப் மண்டல். இவர் இந்தியா டுடே இதழில் மேலாண்மை ஆசிரியராகவும், ஊடகவியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது தி பிரிண்ட் இணையதளத்தின் ஆலோசகராக உள்ளார். இதனை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்துள்ளார் கா.அமுதரசன்.


1. நான் ஒரு பார்ப்பனராக இருக்கும்போது, சமுதாயத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறேன். என் பெயரின் பின்னால் 'ஜீ' என்ற பின்னூட்டத்தைச் சேர்ப்பர்.

2. நான் எவ்வளவு பெரிய படிப்பறிவில்லாத ஒரு முட்டாளாக இருந்தாலும், என்னைப் பண்டிதர் என்றழைப்பார்கள்.

3. அனைத்து பொது இடங்களுமே எனக்கு உரியதாகும்.என்னுடைய கலாச்சார விருப்பங்களுக்கு ஏற்றாற்போல், உணவு பரிமாறும் உணவகங்கள் எனக்குக் கிடைக்கும். எனது விருப்பத்திற்கு ஏற்ற உணவினைக் கேட்பது தவறாகாது. மாறாக, அது என்னுடைய சமூக அந்தஸ்தை அதிகரித்துக் காட்டும்.

4. நான் பல்கலைக்கழகங்களில் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் போது, என்னுடைய ஜாதியைச் சேர்ந்த ஒரு நபராவது, அந்தக் கேள்வி கேட்பவர்கள் குழுவில் இருப்பர்.

5. என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத் திட்டத்தில் எங்களுடைய கலாச்சார விருப்பத்திற்கு ஏற்றார் போல பாடங்கள் அமைத்திருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கலாம், மற்றும் அதை எழுதியவர்களும் என்னுடைய ஜாதியைச் சேர்ந்தவர்களாய் இருப்பர்.

6. நான் எப்போதெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றியோ அல்லது ஹிந்து நாகரிக வளர்ச்சியைப் பற்றியோ கேள்விப்படுகிறேனோ, அப்பொழுது நான், எங்களுடைய ஜாதிய பாரம்பரியத்தைப் பற்றி தான் கேள்விப் படுகிறேன் என்பது உறுதி .

7. நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, என்னுடைய ஜாதியினரின் கூட்டு ஆக்கிரமிப்பைக் காண முடியும். மேற்கத்திய உலகின் உறுதியான செயல்திட்டங்களினால், வேலைவாய்ப்புகள் எனக்கு கிடைத்தாலும், நான் இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருப்பேன்.

8. இடஒதுக்கீட்டை எதிர்ப்பது, என்னை ஒரு போதும் ஜாதியவாதியாக காட்டாது.

9. கோவில்களில் அர்ச்சகர் பணியிடங்கள் நூறு சதவிகிதம் என்னுடைய ஜாதியினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். 

10. என்னுடைய மூன்றாம் தரக் கட்டுரைகள் கூட என்னுடைய ஜாதிப் பெயர் பின்னூட்டத்திற்காகவே ஆய்வறிக்கைகளில் இடம்பெறும்.

11. தனியார் துறைகளில் என்னுடைய ஜாதியினரின் சிபாரசினால் எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அது என்னை ஒரு ஜாதியவாதியாகக் காட்டாது.

12. நான் தொலைக்காட்சிகளில் செய்தி, விவாத நிகழ்ச்சிகள் பார்க்கும்பொழுது என்னுடைய ஜாதியினரே பெரும்பாலும் அறிஞர்களாகவோ , தொகுப்பாளர்களாகவோ இருப்பர்.

13. என்னுடைய ஜாதியினரே தேசிய அச்சு ஊடகங்களில் மக்களின் பெரும்பான்மை பார்வை கட்டுரைகளை எழுதுவர்.

14. நான் ஒரு பார்ப்பனராக இருந்து, என்னுடைய வழக்கு நீதிமன்றத்தில் வழக்காடும்பொழுது, என்னுடைய ஜாதியைச் சார்ந்த நபர் ஒருவர், அதை விசாரிப்பவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகம் .

15. நான் ஒரு பார்ப்பனராக இருக்கும்போது, எனது கட்டுரையை என்னுடைய ஜாதியை சார்ந்த நபர்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருக்கும் பத்திரிக்கைகளில் பதிப்பிடுவது மிகச் சுலபமான காரியமாகும்.