அடுத்தவன் பொன்டாட்டியை ஆட்டைய போட்ட இன்ஸ்பெக்டர்! தூத்துக்குடியில் கதறும் கணவன்!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடம் காவல் நிலையத்திற்கு குடும்ப பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணை இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தன் வசப்படுத்தி குடும்பம் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது-


   சாத்தான்குளத்தை அடுத்த தாமரை மொழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி தனலட்சுமி. திருமணமாகி தாமரை மொழியில் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அப்போது ஜெகதீஷ் உறவினர்களுக்கும் அவரது மனைவி தனலட்சுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜெகதீஷ் தனது உறவினர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

  இதனால் தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு சென்ற தனலட்சுமி தனது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது புகார் அளித்தார். புகாரை காவல் நிலைய ஆய்வாளர் கஜேந்திரன் விசாரிக்க ஆரம்பித்துள்ளார். இதனை தொடர்ந்து சில நாட்களாக தனலட்சுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெகதீசின் உறவினர்கள் பலர், தனலட்சுமியின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனலட்சுமி கணவர் ஜெகதீசை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் மனைவி எங்கு இருக்கிறார் என்று தேடிய போது தான், அவர் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவந்தது. தனியாக வசித்து வரும் தனலட்சுமி வீட்டுக்கு ஆய்வாளர் கஜேந்திரன் அடிக்கடி வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது குறித்து கேட்ட போது, ஜெகதீசையும் பொய் வழக்கில் கைது செய்ய நேரிடும் என்று கஜேந்திரன் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.


இதனால் அதிர்ச்சி அடைந் ஜெகதீஷ், ஆய்வாளர் கஜேந்திரன் தனது மனைவியை அபகரித்து வைத்திருப்பதாகவும், தனது மனைவிக்கும் காவல் ஆய்வாளர் கஜேந்திரனுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது மனைவி தனலட்சுமியுடன் – காவல் ஆய்வாளர் கஜேந்திரன் பேசும் ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் புகார் அளிக்க வருவதாக கூறும் தனலட்சுமியை கஜேந்திரன் தனியாக ஒரு இடத்திற்கு வரும்படியும், தான் காரில் அழைத்துச் செல்வதாகவும் கூறுவது போன்ற உரையாடல் உள்ளது.

இந்த புகார் குறித்து டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். அதே சமயம் வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ள ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை என்று காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மறுத்துள்ளார். இருப்பினும் புகார் அளிக்க வந்த பெண்ணை காவல் ஆய்வாளர் ஆட்டய போட்டுவிட்டதாக தூத்துக்குடி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.