மோடி ஒரு கோமாளி! ஸ்டாலின் மகன் உதயநிதி வயதுக்கு மீறிய பேச்சு!

வேலூர் மாவட்டத்த்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டது சர்ச்சையாகியுள்ளது.


வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் தி.மு.க பொருளாலர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெரு பகுதியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் வேன் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

வேலூரில் பிரச்சாரம் தொடங்குவதை பெறுமையாக பார்க்கிறேன். மோடி ஒரு என்.ஆர் பிரதமர். பிரதமர் மோடி 5 ஆண்டில் 4 முறை மட்டுமே தமிழகம் வந்துள்ளார். ஒக்கி, கஜா புயல் போன்ற துயரங்களில் கை கொடுக்கவில்லை போதிய நிதியை நமக்கு வழங்க வில்லை. மோடி ஒரு திவாலான ஆட்சியை நடத்தி வருகிறார். 

மோடி தன்னை சைக்கிதார் மோடி என அழைக்க வேண்டும் என கூறுகிறார். அப்படி என்றார் காவலாளி என அர்த்தம். ஆனால் அவர் ஒரு கோமாளி மோடி. இந்தியாவிலேயே உழலில் உத்தர பிரதேசம் முதல் இடம். தமிழகம் 3 வது இடம் என ஆங்கில செய்தி நிறுவனர் கூறியிறுக்கிறது. *இது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அல்ல அடல்ஸ் ஒன்லி திராவிட முன்னேற்ற கழகம்.*

 உதாரணம் நிர்மலாதேவி, ஜெயகுமார் விவகாரம் தற்போது கொடுரமான பொள்ளாச்சி சம்பவம்.  அம்மா வழியில் ஆட்சி என கூறி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக உள்ளது என்று உதயநிதி பேசினார்.

என்னதான் ஸ்டாலின் மகனாக இருந்தாலும் வயதில் மூத்தவரான மோடியை இப்படியா விமர்சிப்பது என்று திமுகவினரே முகம் சுழித்துச் சென்றதை பார்க்க முடிந்தது.