திமுகவிற்கு வாக்கு கேட்கும் அதிமுகவின் நியூஸ் ஜே டிவி! அடிச்சு தூள் கிளப்பிய ஸ்டாலினின் IT விங்க்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனல் என்று கூறப்படும் நியூஸ் ஜே தொலைக்காட்சியின் இணையதளத்தில் திமுகவின் விளம்பரம் இடம் பெற்றுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக இணையதள பயன்பாட்டாளர்களை குறிவைத்து விளம்பரங்கள் வெளியிட்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்பு சட்டம்-ஒழுங்கு நிலைமை ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு என பல்வேறு பிரச்சனைகளை குறிப்பிட்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரங்கள் செய்யப்படுகிறது.

திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இந்த விளம்பரங்கள் தமிழகத்தின் முன்னணி இணைய தளங்கள் அனைத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொலைக்காட்சி என்று கூறப்படும் நியூஸ் ஜே தொலைக்காட்சியிலும் இந்த விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.

அதாவது நியூஸ் தொலைகாட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திமுகவிற்கு வாக்களிக்குமாறு விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு கூகுள் நிறுவனத்தின் AdWords எனும் தொழில்நுட்பம் மூலமாக விளம்பரம் செய்து வருகிறது. இந்த அடிப்படையில் அரசியல் இணையதளம் என்கிற வகையில் இயல்பாகவே இந்த விளம்பரம் நியூஸ் ஜே தொலைக்காட்சியின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

ஆனால் விளம்பரங்களை பிளாக் செய்யும் வசதி இருக்கும் நிலையிலும் நியூஸ் தொலைகாட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இந்த விளம்பரங்களை அனுமதித்து திமுகவிற்கு விளம்பரம் செய்து தர்மசங்கடமான சூழலில் சிக்கியுள்ளது.