குருமூர்த்திக்கு தொடை நடுங்கும் அ.தி.மு.க.! எடப்பாடி பழனிசாமிதான் தூண்டிவிட்டார?

அது ஒரு காலம். ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரே ஒரு வார்த்தை பேசினாலும் அம்புட்டுத்தான். சுப்பிரமணியம் சுவாமியில் இருந்து சேஷன் வரையிலும் எப்படியெல்லாம் தமிழகத்தில் ஓட ஓட விரட்டப்பட்டார்கள் என்பது வரலாறு.


ஆனால், இப்போது அ.தி.மு.க.வினருக்கு ஆண்மை இல்லை என்று மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் பேசியிருக்கிறார் குருமூர்த்தி. மேலும் சசிகலா முதல்வராகவிருந்த தருணத்தில் அதனைத் தடுக்க தியானம் இருக்கும்படி பன்னீர்செல்வத்தை இவர்தான் தூண்டிவிட்டாராம். 

இதையெல்லாம் பன்னீர்செல்வம் எப்போதும் போல் அசட்டுத்தனமாக கடந்து செல்வார் என்பதுதான் உறுதி. ஏனென்றால், இப்படித்தான் தினகரன் அவரை கூப்பிட்டு வைத்து கும்மியடித்தார். அப்போதும் அசட்டு சிரிப்புத்தான்.

இன்று நமது அம்மா பத்திரிகையில் வீரமாக ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்கள். இப்படி வெட்டி அறிக்கையைத் தாண்டி அ.தி.மு.க.வினர் எதுவும் சொல்லவும் மாட்டார்கள், செய்யவும் மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது. 

இதைப் பார்த்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கேட்டதுதான் மில்லியன் டாலர் கேள்வி. ஒரு வேளை குருமூர்த்தியை இப்படி பேசுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் தூண்டி விட்டிருப்பாரோ..? என்கிறார். நியாயமான கேள்விதான்.