கால் எடுக்கப்பட்ட அனுராதாவை எட்டிப் பார்க்காத அ.தி.மு.க., நிதியுதவி வழங்கிய தி.மு.க..!

சமீபத்தில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததால் வண்டியில் சென்ற அனுராதா விபத்தில் சிக்கி, தன்னுடைய கால்களை பறிகொடுக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளானார்.


இந்த சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியபோது, சாலையில் கொடிக்கம்பம் நடக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லவில்லையே என்று பதில் கேள்வி கேட்டாரே தவிர, இளம்பெண்ணுக்கு ஆறுதல்கூட சொல்லவில்லை.

முதல்வர் உத்தரவாலோ என்னவோ, அந்த விபத்துக்குக் காரணமான லாரி டிரைவரை கைது செய்த காவல் துறை, வழக்கம்போல் கொடிக்கம்பம் நட்டிவைத்த அ.தி.மு.க.வினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இன்று அனுராதாவின் பெற்றோரை சந்தித்த ஸ்டாலின் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு நிதியுதவி வழங்கி இருக்கிறார். பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவராக நடந்திருக்கிறார் என்று கோவை மக்கள் பாராட்டுகின்றனர்.