கன்னியாகுமரி அ.தி.மு.க. பிரமுகர் மீது கள்ளக்காதல் புகார்..! மனைவி அதிரடி!

சுசீந்திரம்: கன்னியாகுமரி அதிமுக பிரமுகர் மீது, அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.


கன்னியாகுமரி அக்கரை பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜின் காந்தி, கேரள மாநிலம் பால்ராமபுரம் பகுதியை சேர்ந்த நளினகுமாரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தை பிறந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, ஷாஜின், வேறு ஒரு பெண்கூட தனிக்குடித்தனம் செய்து வருகிறாராம்.

இதுபற்றி கேள்வி கேட்டபோது, தன்னை அடித்து உதைத்து, கையை உடைத்துவிட்டதாக, நளினகுமாரி , நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன், சில மாதங்களுக்கு முன்பாக, அந்த பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டுவிட்டாராம். இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நளினகுமாரி புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

தங்களது திருமணம் தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அவர் போலீசில் சமர்ப்பித்துள்ளார்.