காங்கிரஸ் கோட்டை என்று கருதப்பட்ட நாங்குநேரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை சற்றே தாமதமாகத் தொடங்கியது.
நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. அமோக அறுவடை! அதிர்ச்சியில் காங்கிரஸ்!
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முதல் சுற்றில் 943 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 555 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்.
கடைசி கட்டத்தில் அ.தி.மு.க.வினர் கொடுத்த வைட்டமின் மிகச்சிறப்பாக பயன் அளித்துள்ளதாக அமைச்சர் பெருமக்கள் தெரிவிக்கிறார்கள். இந்தத் தொகுதியில் தோல்வி அடைந்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கடும் நெருக்கடி கொடுக்கப்படும் என்ற அச்சத்தில் காங்கிரஸ் உள்ளது.