பணத்தை திருப்பிக்கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். செயலுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் பாராட்டு.

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுவுடன் ஒரு விண்ணப்பக் கட்டணமும் பெறுவது வழக்கம்.


ஆனால், ஒரு வேளை தேர்தல் நடைபெறவில்லை என்றால், அப்படி கட்டப்பட்ட பணத்தை கட்சி அப்படியே சுருட்டிக்கொள்ளும். அப்படிப்பட்ட கட்சிகளுக்கு மத்தியில், அ.தி.மு.க. மட்டும் திருப்பிக்கொடுப்பதாக அறிவித்துள்ளது.

ஆம், கடந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற எண்ணத்தில் விருப்பமனு வாங்கப்பட்டது. அந்த நேரத்தில் பணம் செலுத்தியவர்கள், ஒரிஜினல் ரசீதைக் காட்டி பணம் வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இது, அ.தி.மு.க. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.