விஜய்க்கு எப்டி இடம் கொடுக்கலாம்! சாய்ராம் கல்லூரிக்கு குடைசலை ஆரம்பித்த அதிமுக அரசு!

பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு எஅனுமதி அளித்தது குறித்து பிரபல கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இளையதளபதி விஜயின் நடிப்பில் வெளிவரப்போகும் அடுத்த திரைப்படம் "பிகில்". இந்த திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னை புறநகரில் அமைந்துள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சமீபகாலமாக விஜய் தன்னுடைய திரைப்படம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்த கருத்துக்களை காட்டமாக வைத்து வருகிறார். 

இதேபோன்று 19-ஆம் தேதியன்று பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், சுபஸ்ரீயின் மரணம் குறித்து விஜய் கடுமையாக அரசுக்கு எதிராக பேசியிருந்தார். "யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ; அங்கு உட்கார வைக்க வேண்டும்" என்று மறைமுகமாக முதலமைச்சருக்கு எதிராக கருத்து பதிவு செய்தார்.

இது ஆளுங்கட்சிக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக அமைச்சர்கள் சிலர், "தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவே பட நிகழ்ச்சிகளில் விஜய் அரசியலை பயன்படுத்துகிறார். தன்னுடைய படம் போட வேண்டும் என்றால் யார் காலிலும் விடுவதற்கு விஜய் தயாராக இருப்பார். அவ்வாறு பேசவில்லை என்றால் அவருடைய படம் ஓடாது" என்று பதிலடி கொடுத்தனர்.

தற்போது தமிழ்நாடு உயர் கல்வித்துறை ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "எதன் அடிப்படையில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு அனுமதி அளித்தீர்கள்" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ரஜினியின் பேட்டை திரைப்படத்திற்கும் இந்தக் கல்லூரியில்தான் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.