தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் நபர் அதிமுகவினர் மத்தியில் திமுகவின் கனிமொழிக்கு வாக்கு கேட்ட ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுமக்களை திரட்டி கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்! தொண்டர்கள் பயங்கர ஷாக்!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் விளாத்திகுளம் வந்த சின்னப்பன் அங்குள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் உணர்ச்சிப் பெருக்குடன் சின்னப்பன் பேச ஆரம்பித்தார். கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்து ஒரு கட்டத்தில் சின்னப்பன் பேச்சு குழற ஆரம்பித்தது.
தான் அதிமுக வேட்பாளர் என்பதையும் மறந்து தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை போட்டியிடுகிறார் என்பதையும் மறந்து திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்களிக்கும்படி அவர் கூட்டத்தினரைப் பார்த்து கேட்க ஆரம்பித்துவிட்டார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு சிரிப்பொலியும் எழுந்தது.
இதனால் தலையை சொறிந்தபடி பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு வாக்களியுங்கள் என்று கூறி சமாளித்து விட்டு சின்னப்பன் அங்கிருந்து புறப்பட்டார். அதிமுக வேட்பாளர் ஒருவர் திமுக வேட்பாளருக்கு அதிமுக கூட்டத்திலேயே வாக்கு சேகரித்தது ருசிகர சம்பவம் ஆக அமைந்து விட்டது.