அதிமுக – தேமுதிக டீல் முடிந்தது! இன்று இரவு கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகிறது!

அதிமுக – தேமுதிக இடையிலான பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இன்று கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகிறது.


விஜயகாந்த், பிரேமலதா , சுதீஷ் செல்கிறார்கள்.

இன்றுமாலை 7.30 முதல் 8.30 மணிக்குள் அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி செய்யபட உள்ளது என தகவல்.

இடம். கிரவுண் பிளாசா

ஒரே நேரத்தில் அதிமுக – திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அசிங்கப்பட்டு நிற்கிறது தேமுதிக. ஆனால் அந்த கட்சிக்கு ஒரு தொகுதிக்கு பத்தாயிரம் வாக்குகள் இருக்கும் என்று திண்மமாக நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி.

எனவே தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவந்தவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். இதே போல் தேமுதிகவின் சில ஆயிரம் வாக்குகள் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் உதவும் என்று எடப்பாடி கருதுகிறார்.

இதனால் தான் மிகவும் பிகு பண்ணிய தேமுதிகவை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது அதிமுக தரப்பு. இதனிடையே பெயர் நாறிப்போய்விட்டதால் இனியும் கூட்டணிக்கு தாமதம் செய்யக் கூடாது என்கிற முடிவுக்கு தேமுதிக வந்துள்ளது.

அதன்படி அதிமுக தருவதாக சொன்ன 4 சீட்டுகளுக்கு தேமுதிக தற்போது ஓ.கே. சொல்லிவிட்டது. எனவே இன்று தேமுதிக – அதிமுக இடையே சென்னை போரூரில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து கூட்டணி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் நான்கு சீட்டுகளுடன் உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தலிலும் சில இடங்களை ஒதுக்க அதிமுக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் பாமகவை விட குறைவான தொகுதிகளுக்கு தேமுதிக ஒப்புக் கொண்டதாம்.